புகாரை வாங்க போலீஸ் மறுப்பு? பாட்டிலுடன் காவல் நிலையம் வந்த இளைஞர்.. திடீரென எடுத்த விபரீத முடிவு!

Author: Hariharasudhan
21 January 2025, 11:14 am

சென்னை, ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை: சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையத்துக்கு நேற்று இரவு 9.15 மணியளவில், ஒரு பாட்டிலுடன் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். பின்னர், திடீரென அந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

பின்னர், இதைப் பார்த்த போலீசாரும், பொதுமக்களும் உடனடியாக அந்த இளைஞா் மீது தண்ணீரை ஊற்றி, அவரை மீட்டனர். இதனையடுத்து, பலத்த காயமடைந்த இளைஞரை சிகிச்சைக்காக, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தகவல் அறிந்த போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

A Youth Set fire himself in Chennai RK Nagar Police station

இந்த விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற நபர், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜன் (30) என தெரிய வந்துள்ளது. மேலும், ராஜனை அவரது நண்பர்கள் இருவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. எனவே, இது தொடர்பாக புகார் அளிப்பதற்காக ராஜன் காவல் நிலையம் சென்றுள்ளார்.

இதையும் படிங்க: விஜயின் முக்கிய குற்றச்சாட்டு.. தீயாக பரவிய தகவல்.. ஜி ஸ்கொயர் நிறுவனம் மறுப்பு!

ஆனால், அவரது புகாரை போலீசார் வாங்க மறுத்த‌தாக கூறப்படும் நிலையில், திடீரென போலீஸ் ஸ்டேஷன் வாசலில், தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு ராஜன் தீ வைத்துக் கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், மருத்துவமனையில் ராஜனின் உறவினர்கள் குவிந்த‌தால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

(குறிப்பு: எந்தவொரு நிலையிலும், நிலைக்கும் தற்கொலை தீர்வல்ல)

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?