ரயிலில் வந்த அப்பா, மகள்.. ஸ்டேஷனில் காத்திருந்த அதிர்ச்சி.. அதிரவைத்த சம்பவம்!
Author: Hariharasudhan27 March 2025, 10:02 am
பீகாரில், ரயில் ஏற வந்த அப்பா, மகளை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாட்னா: பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஆரா ரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் (மார்ச் 25) இரவு, 16 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் வந்துள்ளார். மேலும், டெல்லியில் படித்து வந்த அந்தச் சிறுமி, அங்கு செல்வதற்காக ரயில் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்துள்ளார்.
தொடர்ந்து, ரயில்வே நடைமேடையின் படிக்கட்டுகளில் சிறுமியும், அவரது தந்தையும் இறங்கி வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது இளைஞர் ஒருவர் அவர்களை வழிமறித்துள்ளார். மேலும், மிகவும் ஆத்திரத்துடன் காணப்பட்ட அந்த இளைஞர், அவர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், மூவரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த நிலையில், ஒருகட்டத்தில் அந்த இளைஞர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அந்தப் பெண்ணின் தலையிலேயே சுட்டுள்ளார். இதனால் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கண்ணிமைக்கும் நொடியில் போன மகளின் உயிரைப் பார்த்து அதிர்ந்து போன சிறுமியின் தந்தை, இளைஞர் மீது பாய்ந்துள்ளார். எனவே, அவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார் அந்த இளைஞர். பின்னர், சத்தம் கேட்டு ரயில்வே போலீசார் மற்றும் பயணிகள் அப்பகுதிக்கு ஓடி வருவதற்குள் அந்த இளைஞர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: சுக்கு நூறாக உடைந்த கார்.. பிரபல நடிகரின் மனைவிக்கு ஷாக்.. அதிர்ச்சியில் திரையுலகம்!
இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர் அமன் குமார் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த சிறுமி ஜியா குமாரி என்றும், அவரது தந்தை அனில் குமார் சின்ஹா என்றும் தெரிய வந்துள்ளது. ரயில் நிலையத்தில் நடைமேடைக்குச் செல்லும் ஓர் பிரிட்ஜ் நடைபாலத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும், தனது காதலை ஏற்காததால் இளைஞர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.