பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் ஏறச் சென்ற இளைஞருக்கு அரிவாள் வெட்டு.. சங்கரன்கோவிலில் பரபரப்பு!

Author: Hariharasudhan
10 December 2024, 12:42 pm

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் ஏறச் சென்ற இளைஞர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தென்காசி: தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் கலைஞர் காலனி தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். 23 வயதான இவர், சென்னையில் தனியார் கம்பெனியில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று (டிச.10) மாலை, சென்னை செல்வதற்காக பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை எதிர்பார்த்து சங்கரன்கோவில் ரயில் நிலையத்திற்கு (Sankarankovil Railway Station) வந்துள்ளார்.

அப்போது, பொதிகை எக்ஸ்பிரஸ் (Pothigai Express) ரயிலும் வந்து உள்ளது. இந்த நிலையில், செல்வராஜை பின் தொடர்ந்து வந்த சில மர்ம நபர்கள், செல்வராஜை அரிவாளால் சராமரியாக வெட்டிவிட்டு, அங்கு இருந்த முட்புதர் வழியாக தப்பி ஓடி உள்ளனர். இதனால் பலத்த காயம் அடைந்த செல்வராஜ், சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உள்ளார்.

Youth stabbed in Sankarankovil Railway station while waiting for Pothigai Express

பின்னர் இது குறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன்கோவில் டவுன் போலீசார், செல்வராஜை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதித்தனர்.

Youth stabbed in Sankarankovil Railway station and admitted in Nellai GH

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார், செல்வராஜை யார் வெட்டினார்கள்? கொலை முயற்சிக்கான காரணம் என்ன? என்பது குறித்து சார்பு துணை ஆய்வாளர் வெள்ளத்துரை மற்றும் ரயில்வே போலீஸ் சார்பு ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சமாதானம் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சிறுவன் சடலமாக மீட்பு.. பின்னணி என்ன?

இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், காதல் விவகாரம் தொடர்பாக செல்வராஜுக்கும், கண்ணனுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரிய வந்து உள்ளது. இதனையடுத்து, கண்ணனை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற விசாரணையைத் துரிதப்படுத்த உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 129

    0

    0

    Leave a Reply