சாலையில் நின்று கொண்டிருந்த தனுஷ் வெட்டிக்கொலை.. 9 பேர் கைதானதன் பின்னணி!

Author: Hariharasudhan
30 January 2025, 10:04 am

சென்னையில் குத்துச்சண்டை வீரர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: சென்னையின் திருவல்லிக்கேணி அடுத்த கிருஷ்ணம்மாள் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ். இவர், பல்வேறு குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம் பெற்றுள்ளார். மேலும், போலீஸ் தேர்வுக்கும் தன்னை தயார்படுத்திக் கொண்டு வந்துள்ளார்.

இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் சில இளைஞர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாகவும், இதனால் தனுஷ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு வீட்டின் அருகே நண்பர்களுடன் தனுஷ் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மர்ம கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் தனுஷை வெட்டிப் படுகொலை செய்துள்ளது. இதனைத் தடுக்க வந்த அவரது நண்பர் அருண் என்பவரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து அக்கும்பல் தப்பிச் சென்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் தனுஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Chennai Youth Murder today

பின்னர், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஐஸ் ஹவுஸ் போலீசார், தனுஷின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த அருண், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: பெண்களை துரத்திய திமுக கட்சி கொடி பொருந்திய கார்? வைரலான வீடியோ : போலீஸ் விளக்கம்!

இந்த நிலையில், இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஐஸ்ஹவுஸ் போலீசார், மோகன், செந்தில், டேவிட் மற்றும் விஷால் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ