காதலியை ஊருக்கு அனுப்பிவிட்டு திருமணமான பெண்ணுடன் உல்லாசம்.. ஒரே நேரத்தில் இருவரை காதலித்த வாலிபருக்கு நேர்ந்த சோகம்!
Author: Udayachandran RadhaKrishnan19 September 2024, 2:18 pm
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள வைகை நகர் திருமகள் தியேட்டர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி.
இவரது மனைவி தனலட்சுமி ( வயது 47). இவர்களது மகன் பிரேம்குமார் (வயது 30). கோவை சீர நாயக்கன் பாளையத்தில் ராதாகிருஷ்ணன் தெருவில் தங்கி இருந்து எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்தார்.
கடைசியாக கோவை நேதாஜி ரோட்டில் உள்ள தியேட்டரில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்து உள்ளார். இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த ரக்ஷ்னி என்ற பெண்ணுக்கும் பிரேம்குமாருக்கும் காதல் ஏற்பட்டது.
இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் பிரேம்குமார் ரக்ஷ்னிக்கு தெரியாமல்
கவிதா என்ற பெண்ணையும் காதலித்து வந்து உள்ளார்.
கவிதா ஏற்கனவே திருமணம் ஆகிய நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். கவிதாவிடம் பிரேம்குமார் தான் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலிப்பதை மறைத்து உள்ளார்.
தில்லாலங்கடி படத்தில் வரும் சம்பவம் போல ரக்ஷ்னிக்கு தெரியாமல் கவிதாவை அடிக்கடி பிரேம்குமார் சந்தித்து வந்து உள்ளார்.
இது நீண்ட நாட்களாக ரக்ஷ்னிக்கு தெரியாமல் இருந்தது. அடிக்கடி காதலி ரக்ஷ்னியை மதுரைக்கு அனுப்பி வைத்து விட்டு பிரேம்குமார் கவிதாவுடன் கோவையில் உள்ள வீட்டில் இருந்து வந்து உள்ளார்.
இந்த நிலையில் காதலிகள் இருவருக்கும் பிரேம்குமார் நடவடிக்கை மீது சந்தேகம் ஏற்பட்டது. தங்களுடன் இருக்கும் போதே செல்போனில் தனியாக சென்று பேசுவது என்று இருந்ததால் இது குறித்து தனித் தனியே இருவரும் கேள்வி கேட்டு உள்ளனர்.
ஆனால் பிரேம்குமார் இருவரையும் சமாளித்து வந்து உள்ளார். ஆனால் பிரேம்குமாரின் இந்த காதல் இரு காதலிகளுக்கும் தெரியவந்தது.
இதனால் பிரேம்குமாரை இருவரும் கேள்வி கேட்டனர். தனது குட்டு அம்பலமானதால் பிரேம்குமார் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் நேற்று ரக்ஷ்னிக்கு செல்போனில் பேசிய பிரேம்குமார் “நீ வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழ் என்று”கூறிவிட்டு பிரேம்குமார் போனை துண்டித்து விட்டால்.
இதனால் மீண்டும் பிரேம்குமாரை ரக்ஷ்னி தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சடைந்த ரக்ஷ்னி மற்றும் கவிதா ஆகியோர் பிரேம்குமாரின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
அதன் பிறகு அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பிரேம்குமார் மின்விசிறியில் லுங்கியால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார். இதை பார்த்ததும் இருவரும் அதிர்ச்சடைந்தனர்.
மேலும் படிக்க: பெண்ணை கொலை செய்து சடலத்தை வெட்டி சூட்கேஸில் அடைத்த சம்பவம்.. ஆண் நண்பர் கைது : திடுக்கிடும் தகவல்!
பிறகு கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தூக்கில் தொங்கிய பிரேம்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மதுரையில் உள்ள பிரேம்குமாரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்று பிரேம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அவரது தாய் தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
கோவையில் தில்லாலங்கடி படத்தில் வருவது போல் வாலிபர் 2 பெண்களை ஒரே நேரத்தில் ஏமாற்றி காதலித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.