காஞ்சிபுரம் அருகே உயர்ரக பைக்குகளை மட்டும் குறிவைத்து திருடி வந்த கொள்ளையனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
சிவகாஞ்சி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட காஞ்சிபுரம் மாநகரப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் இருசக்கர வாகன திருட்டு சம்பந்தமாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
குறிப்பாக, மாநகரப் பகுதிகளில் யமஹா R15, ராயல் என்பீல்ட் புல்லட், யமாஹா ஆர்.எக்ஸ் 100 போன்ற விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்தது. இதையடுத்து, இப்புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, காஞ்சிபுரம் மாநகரில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: கஞ்சா வழக்குகளில் தப்பிக்க வைக்கப்படும் குற்றவாளிகள்… துணைபோகும் காவல்துறை ; தமிழக அரசை எச்சரிக்கும் அன்புமணி!!
விசாரணையில் காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை பகுதியை சேர்ந்த தரணிதரன் (வயது 22) என்ற இளைஞன் தான் இந்த தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனையடுத்து, இளைஞன் தரணிதரனை கைது செய்த போலீசார், அவனிடமிருந்து
யமஹா R15,ராயல் என்பீல்ட் புல்லட், யமாஹா ஆர்.எக்ஸ் 100 உள்ளிட்ட 7 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
அதனைதொடர்ந்து, கைது செய்யப்பட்ட தரணிதரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு வேலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
கோவை தடாகம் சாலையில் உள்ள அவிலா கான்வெண்ட் என்ற தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சரி…
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக இன்று வரை பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகள் நீடித்து வருகின்றன. 2019ஆம்…
இயக்குனர் டூ காமெடி நடிகர் அஜித்தின் “ரெட்”, சூர்யாவின் “மாயாவி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. எனினும் இத்திரைப்படங்களை தொடர்ந்து…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று…
நடிகை அமலாபால் மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து விஜய்,…
டாப் நடிகர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆமிர்கான். இவர் தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் உதவி இயக்குனராகவும் தனது…
This website uses cookies.