கையில் அரிவாளுடன் ரவுடிசம்.. பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்… வைரலாகும் ஷாக் வீடியோ!!

Author: Babu Lakshmanan
16 February 2023, 10:11 am

மதுரையில் கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை மாநகர் அண்ணாநகர் வெக்காளி அம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள பெரியார் வீதி பகுதியில் இளைஞர் ஒருவர் மது அருந்திவிட்டு கையில் ஆயுதங்களை எடுத்தபடி பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்றும் அதே பகுதியில் மதுபோதையில் வந்த இளைஞர் கையில் நீண்ட அரிவாளுடன் அந்த வழியாக சென்று பொதுமக்களை மிரட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் இளைஞர் அந்த பகுதியில் சைக்கிளில் செல்லக்கூடிய முதியவர் ஒருவரை அரிவாளை காட்டி ஆபாச வார்த்தைகளை பேசியபடி அவரை மிரட்டுவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இது குறித்து அண்ணாநகர் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

மதுரை மாநகரில் சில நாட்களாக கையில் ஆயுதங்களோடு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் அலைந்து திரிவதாக காவல்துறையினர் கைது செய்த நிலையில், தொடர்ச்சியாக இளைஞர்கள் கையில் ஆயுதங்களை எடுத்து பொதுமக்களை மிரட்டும் சம்பவங்களும் அதிகரித்துள்ளதை இந்த வீடியோ வெளிப்படுத்தியுள்ளது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?