கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அத்துமீறிய இளைஞர்கள்.. மீடியா டவர் மீது ஏறி அட்டகாசம்!
Author: Udayachandran RadhaKrishnan1 January 2025, 12:53 pm
கோவை ரேஸ்கோர்ஸ் மீடியா டவர் பகுதியில் அதிவேகமாக இரு சக்கர வாகனங்களை அதிக ஒலியுடன் இயக்கி வந்த 20-க்கும் மேற்பட்ட வாகனங்களை ரேஸ்கோர்ஸ் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
மேலும் விதிகளை மீறி இருசக்கர வாகனங்களை இயக்கியவர்கள் மீது ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அதனை தொடர்ந்து மீடியா டவர் மீது மது போதை அட்டகாசம் செய்த இளைஞர் ஒருவரை போலீசார் தடியடி நடத்தி தரதரவென இழுத்து சென்று காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படியுங்க: ’சபாநாயகர் தனிச் செயலரின் மனைவி நான்’.. மிரட்டும் ஆசிரியை? இரட்டைமலை சீனிவாசன் பேத்தி பரபரப்பு புகார்!
அதேபோல மீடியா டவர் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளைஞர்கள் மதுபோதையில் அட்டகாசம் செய்து வந்தனர். மேலும் மது போதையில் இளைஞர் ஒருவரை கீழே இருந்து மேலே தூக்கி ஆபத்து உணராமல் தூக்கி பிடித்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகரத்தை பொறுத்தவரை பாதுகாப்பு பணிக்காக 1600 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். கோவை மாநகரில் முக்கிய பகுதிகளில் சாலையில் தடுப்பு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.