குடலை உருவிய காட்டு யானை… பைக்கில் வந்த இளைஞருக்கு நேர்ந்த துயரம்..!!
Author: Udayachandran RadhaKrishnan22 January 2025, 10:54 am
கோவை காரமடையை அடுத்து உள்ள வெள்ளியங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அத்திக்கடவு, மானாறு, தொண்டை, சொரண்டி உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின கிராமங்கள் உள்ளன.
இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்றிரவு தோண்டை செட்டில்மென்ட் பகுதியில் வசிக்கும் சதாசிவம் என்பவரது மகன் ஜான் @ சதீஷ்குமார் (23) தனது நண்பர்கள் இருவருடன் மோட்டார் பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.
இதையும் படியுங்க: மக்களிடம் பரபரப்பை கிளப்பவே விஜய் நினைக்கிறார்… பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம்!!
அப்போது, அங்கு உள்ள புதரின் மறைவில் மறைந்து இருந்த ஒற்றைக் காட்டு யானை மூவரையும் துரத்தி உள்ளது.மற்ற இருவரும் தப்பி ஓடிய நிலையில் ஜான் @ சதீஷ்குமார் யானையிடம் சிக்கி உள்ளார். யானை அவரை ஆக்ரோஷமாக தாக்கியதில் வயிற்றுப் பகுதியில் குடல் சரிந்து படுகாயம் அடைந்து உள்ளார்.
இரு நண்பர்களும் சப்தமிடவே யானை அங்கு இருந்து சென்று உள்ளது. பின்னர், அக்கம், பக்கத்தினர் உதவியுடன் ஜானை மீட்ட நண்பர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காட்டு யானை தாக்கியதில் இளைஞர் குடல் சரிந்து படுகாயம் அடைந்த சம்பவம் பழங்குடியின மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.