சிறுமியுடன் எல்லை மீறிய காதல்… 2 முறை கருக்கலைப்பு : திருமணத்துக்கு மறுத்த இளைஞர்.. விசாரணையில் பகீர் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2022, 1:22 pm

சங்கராபுரத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 16- வயதான சிறுமியை நாமக்கல் மாவட்டம் பெரியபட்டி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த விஜய் (24 என்பவர், சங்கராபுரம் பகுதியில் நடைபெற்ற காளியம்மன் கோவில் திருவிழா ஒன்றில் சந்தித்துள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி விஜய் அடிக்கடி அந்த சிறுமிடம் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

இதனால், இரு முறை கர்ப்பமாகியுள்ளார், இதனை யாருக்கும் தெரியாமல், கருக்கலைப்பும் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பெற்றோர் கேட்டுள்ளனர். அதற்கு அந்த சிறுமி நானும் அவரும் ஒன்றாக இருந்து உள்ளோம் என்று தெரிவித்தார்.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர், நாமக்கல் பகுதியை சேர்ந்த விஜயை சந்தித்து தனது மகளை திருமணம் செய்து கொள் என பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் பெற்றோர் கேட்டு உள்ளனர்.

ஆனால், அந்த இளைஞர் சிறுமியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளை ஏமாற்றிய விஜயின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தனர்.

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், விஜயை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 514

    0

    0