போலீஸ் விசாரணையில் பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்டார்களா? தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.. உறவினர்கள் மறியல்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2023, 5:11 pm

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காவல் நிலையம்,திண்டுக்கல்-தேனி மாவட்ட எல்லைப் பகுதியில் மதுரை-பெரியகுளம்,திண்டுக்கல்-தேனி, திண்டுக்கல்-உசிலம்பட்டி உள்ளிட்ட முக்கிய சாலைகளை இணைக்கும் பகுதியாக உள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை வத்தலகுண்டு காவல் துறையினர் வத்தலக்குண்டு-பெரியகுளம் சாலையில் சந்தேகத்தின் பேரில் தேவதானப்பட்டி பட்டியலின டிரம்செட் கலைஞர்களான கரண்குமார்(25), தவம் (26), பாலமுருகன்(24) ஆகியோரை பிடித்து வத்தலக்குண்டு காவல் நிலையத்திற்கு கொண்டுவந்து விசாரணை என்ற பெயரில் இரவு முழுவதும் சட்டவிரோதமாக வைத்து துன்புறுத்தியதில் மூன்று இளைஞரில் கரண்குமார் துன்புறுத்தல் தாங்க முடியாமல் காவல் நிலைய மாடியில் இருந்து குதித்ததில் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் குவிந்த 50-க்கும் மேற்பட்ட கரன்குமாரின் உறவினர்கள், இளைஞர்கள் மூவரும் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு ரத்தக்காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறி காவல் நிலையத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் கூறுகையில் ட்ரம்செட் கலைஞர்களான கரன்குமார் உட்பட சாலையில் சென்ற மூவரையும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்த வத்தலக்குண்டு காவல்துறையினர் உரிய முறையில் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல் காவல் நிலையத்தில் வைத்து விடிய விடிய கடுமையாக தாக்கி துன்புறுத்தியதில் கரண்குமாருக்கு மர்ம உறுப்பு பகுதியில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆனால் காவல்துறையினர் தற்கொலை முயற்சியாக சித்தரிக்க முயல்வதாகவும் எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 327

    0

    0