தூங்கச் சென்ற இளைஞர்… அறையில் இருந்து சடலமாக மீட்பு : குறுஞ்செய்தியில் வந்த தகவல்.. ஷாக் சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2023, 11:46 am

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வாரியார் நகர் பகுதியை சேர்ந்த நரேந்திரன் (வயது 23) இவர் குடியாத்தம் பகுதியில் அவர் தந்தை நடத்திவரும் உணவகத்தில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் இவர் கடந்த ஒரு வருடமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று இரவு உணவு அருந்திவிட்டு அறைக்குச் சென்றவர் தனது நண்பர்களுக்கு “என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

மேலும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து இன்று காலை அவரது அறைக்குச் சென்று பார்த்த அவரது தந்தை மகன் தூக்கிட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் இது குறித்து குடியாத்தம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 451

    0

    0