வீடு புகுந்து பிரபல ரியல் எஸ்டேட் அதிபருக்கு மிரட்டல்.. நகை, செல்போன் பறிப்பு : கோவையில் பகீர்!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2025, 4:40 pm

கோவை பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் தேவ் தர்சன் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை, விளாங்குறிச்சி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

அவர் தனது நண்பர்கள் 5 பேருடன் அறையில் தங்கி இருந்தார் அப்பொழுது அவருடைய வீட்டிற்குள் திடீரென ஆறு பேர் கொண்ட கும்பல் புகுந்தது.

இதையும் படியுங்க: திமுகவிடம் அடகு வைக்கப்பட்ட காங்கிரஸ்.. மூத்த தலைவர்களை விமர்சித்தால்.. தீவிரமடையும் உட்கட்சி விவகாரம்!

அவர்கள் தேவ் தர்சன் மற்றும் அவரது நண்பர்களை மிரட்டி மூன்று பவுன் தங்க நகை, செல்போன், மடிக்கணினி ஆகியவை பறித்து விட்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கு இடையே போலீசார் வாகன சோதனையில் சந்தேகத்திற்கு இடமாக ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மோகன்தாஸ், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கௌதம், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுஜின் என்பதும் அவர்கள் தேவ் தர்சன் வீடு புகுந்து நகை, செல்போன் பறித்ததும் தெரியவந்தது.

உடனே அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Threaten and Robbery From Real Estate Owner

கோவில்பாளையத்தில் வீடு புகுந்து ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி நகை, செல்போன் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Parthiban talks about MGR அடேங்கப்பா.! எம்ஜிஆர்-ன் கருப்பு கண்ணாடி ரகசியம்…போட்டுடைத்த பார்த்திபன்.!
  • Leave a Reply