‘சரிக்கு சமமா வேட்டி கட்டுவியா?’.. முதியவரைத் தாக்கிய இளைஞர்கள்.. திருச்சியில் பயங்கரம்!
Author: Hariharasudhan9 January 2025, 3:53 pm
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் தனக்கு சரிசமமா வேட்டி கட்டுவியா எனக் கூறிக் கொண்டு முதியவரைக் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி: திருச்சியில் பட்டப் பகலில் ஒரு மிகவும் மோசமான சம்பவம் அரங்கேறி உள்ளது. இதன்படி, திருச்சி ஸ்ரீரங்கத்தில் உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ ரங்கநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்ரீரங்கம் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாக 75 வயது முதியவர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இவ்வாறு கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறும், அந்த 75 வயது முதியவர் கூறியுள்ளார். ஆனால், இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர். மேலும், சாதிப் பெயரைச் சொல்லியும் அம்முதியவரை ஆபாச வார்த்தைகளால் அவர்கள் திட்டி உள்ளனர்.
அது மட்டுமல்லாமல், அந்த முதியவரை இரண்டு இளைஞர்கள் சேர்ந்து அடித்து மிதித்து கொடூரமாக தாக்கி உள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அந்த வீடியோவில், “எங்களுக்கு சரிசமமா வேட்டி கட்டுவியா?” என்று கூறி உதைக்கின்றனர்.
இதையும் படிங்க: “பெரியார் அப்படி பேசியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது”.. அண்ணாமலை பரபரப்பு பேட்டி!
தொடர்ந்து, சாதிப் பெயரைச் சொல்லியும் திட்டி அவமானப்படுத்துகின்றனர். மேலும், அவர்கள் கையில் அரிவாளை வைத்துக் கொண்டு, முதியவரை வெட்டுவது போன்று செய்கின்றனர். அதில், மற்றொருவர் முதியவரின் கழுத்தில் காலை வைத்து உதைக்கிறார். எனவே, இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.