கஞ்சா போதையில் இளைஞர்கள் சேட்டை … பைக்கில் சென்றவர் மீது சரமாரி தாக்குதல் ; அதிர்ச்சி சிசிடிவி!!

Author: Babu Lakshmanan
23 April 2024, 1:44 pm

மதுரையில் சித்திரை திருவிழாவிற்கு செல்லும் வழியில் கஞ்சா போதையில், இளைஞர்கள் இரண்டு கடைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சுமார் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இந்த விழாவிற்காக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

மதுரை மாவட்ட முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மோதலில் சுமார் 23 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் கான் முகமது ஓட்டுனராக உள்ளவர், நேற்று இரவு இருசக்கர வாகன மூலம் வேலை முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த வாலிபர்கள் சிலர் கஞ்சா போதையில் இவரை அடித்து காயம் ஏற்படுத்தி உள்ளனர்.

மேலும் படிக்க: விலைவாசி கிடுகிடு உயர்வு… ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2000 கூடுதல் செலவு ; தமிழக அரசுக்கு ராமதாஸ் கொடுத்த ஐடியா..!!!!

படுகாயம் அடைந்த கான் முகமது தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமில்லாமல் அந்த பகுதியில் உள்ள இரண்டு கடைகளையும் அடித்து நொறுக்கி ரகளை ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பான மூன்று வழக்குகள் ஒத்தக்கடை காவல்துறையினர் பதிவு செய்து கஞ்சா போதையில் அட்டகாசத்தில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!