சாலையோரத்தில் மது அருந்திய இளைஞர்கள்.. தட்டிக்கேட்ட போலீஸ் மீது தாக்குதல் : 3 இளைஞர்கள் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
2 July 2024, 12:30 pm

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அன்னூர் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் அழகுராஜா மற்றும் கார்த்திகேயன்

இவர்கள் இன்று அன்னூர் சத்தி சாலையில் உள்ள பசூர் ஊராட்சிக்குட்பட்ட பொங்கலூர் கிராமத்தில் ரோந்து பணியில் இருந்துள்ளனர்

அப்போது அங்கு மூன்று இளைஞர்கள் சாலை ஓரத்தில் நின்று மது குடித்து கொண்டு இருந்துள்ளனர் அதனை பார்த்த போலீசார் இங்கு நின்று மது குடிக்க கூடாது இங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்

இதனால் போலீசாருக்கும் அந்த மூன்று வாலிபர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில் மூன்று இளைஞர்களும் சேர்ந்து காவலர்களை தாக்கி உள்ளனர்

இதனையடுத்து காவலர்கள் அது குறித்து அன்னூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில் அங்கு விரைந்து சென்ற சக போலீசார் காவலர்களை தாக்கி மூன்று இளைஞர்களையும் மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்

விசாரணையில் அவர்கள் கிருத்திக், ஈஸ்வரன்,பிரதீஷ் என்பதும் இவர்கள் மூவரும் பொங்கலூர் பகுதியில் அறை எடுத்து தங்கி தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்ததும் மது போதையில் போலீசாரிடமே தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது

இதனையடுத்து மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த அன்னூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

  • actor rk said that he gave one crore advance to vadivelu வடிவேலுகிட்ட கோடி ரூபாய் கொடுத்தேன், ஆனால் அவரு? ஓபனாக போட்டுடைத்த பிரபல நடிகர்…
  • Close menu