திருச்சியில் பைக்கின் முன்பு வெடி கட்டி பைக் வீலிங்கில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த தஞ்சை வாலிபர் உட்பட மாவட்டத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்ட புறவழிச்சாலைகளில் இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் சாகசம் செய்வதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி எண் 9487464651 மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இதுவரை 4 காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து 11 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் பயன்படுத்திய 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பைக் முன்பு வெடிகளை கட்டி பைக் விலையில் ஈடுபட்ட அஜய் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த தஞ்சாவூர் மாவட்டம் சீனிவாசபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் மணிகண்டன் கைது செய்யப்பட்டு அவருடைய இருசக்கர வாகன பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து திருச்சியில் மாவட்டத்தில் பைக்கில் வீலிங் ஈடுபட்ட ஜீயபுரம் காவல் சரகத்திற்குட்பட்ட பர்ஷத்அலி(21), அஜித்(21), அஜய்(20) சக்திவேல் (20) அஜய்(24), மற்றும் இலால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் வீலிங்கில் ஈடுபட்ட அருள்முருகன்(24), விஜய்(18), கிரித்திஸ்(20), வசந்தகுமார் (20), பெருமாள் என்ற தேசிங்க பெருமாள்(18), முகமது ரியாஸ்தீன்(22) ஆகியோர் மீது சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்க அனுப்ப்பட்டுள்ளனர். அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வாகனங்களை ஓட்டியவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசம் செய்பவர்கள் விபரங்கள் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 9487464651க்கு தெரியப்படுத்துமாறு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.