பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் தர மறுத்த இளைஞர்கள்… பணம் கேட்ட பெட்ரோல் பங்க் மேலாளருக்கு அரிவாள் வெட்டு!!
Author: Babu Lakshmanan25 டிசம்பர் 2023, 2:01 மணி
திருவண்ணாமலை அருகே இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு பணம் தரவில்லையே என்று கேட்ட பெட்ரோல் பங்க் மேலாளரை இளைஞர்கள் அரிவாளால் வெட்டி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏறபடுத்தயுள்ளது.
திருவண்ணாமலை வேங்கிக்கால் பஞ்சாயத்தில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்தப் பெட்ரோல் பங்கில் அனுதினமும் பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனம் என அனைவரும் பெட்ரோல் நிரப்பி செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பியுள்ளனர். இதற்கு பணம் தராமல் தகராறு செய்ததால், பெட்ரோல் பங்க் மேலாளர் ரகுராமன் பணம் தர வேண்டும் என கேட்டுள்ளார். இதற்காக பெட்ரோல் பங்க் மேலாளருக்கும், இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அங்கிருந்து சென்ற இளைஞர்கள் மேலும் மூன்று இளைஞர்களை உடன் அழைத்து வந்து மீண்டும் பெட்ரோல் பங்கில் தகராறு செய்துள்ளனர். இந்த தகராறு முற்றியதால் பெட்ரோல் பங்க் மேலாளர் ரகுராமனை தகாத வார்த்தைகளால் பேசி சர்வ சாதாரணமாக இளைஞர் ஒருவர் பெட்ரோல் பங்க் மேலாளரை கத்தியால் வெட்டும் காட்சிகள் கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகியுள்ளது.
ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகத்து வரும் நிலையே காணப்பட்டு வருகிறது. குறிப்பாக வளரும் இளைஞர்கள் நல்வழியில் செல்லாமல் மது போதை, கஞ்சா போதையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் வகையில் இளைஞர்கள் உள்ளனர். இவர்களை திருத்த வேண்டிய மாவட்ட காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் தூங்கிக் கொண்டு இருக்கிறார்களா என பொதுமக்கள் மத்தியில் பெரும் கேள்விக்குறியை எழுப்பு உள்ளது.
குறிப்பாக நேற்று இரவு நடைபெற்ற இந்த சம்பவத்தில் தொடர்புடைய வடஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்த அரவிந்த் (21), தருண்(22), மற்றும் பார்த்திபன்(23) ஆகிய மூன்று இளைஞர்களை திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அனுதினமும் திருட்டு சம்பவங்கள் அரங்கேரி வரும் நிலையில், தற்போது இளைஞர்கள் சர்வ சாதாரணமாக யாருக்கும் பயப்படாமல் கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்து வரும் நிலையே காணப்பட்டு வருகிறது. தங்களது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி கொண்டு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்ட பெட்ரோல் பங்க் மேலாளரை கத்தியால் வெட்டும் நிகழ்வு திருவண்ணாமலை மக்களிடையே பெரும் கேள்வியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் முழுமையான பாதுகாப்பு செயல்பாட்டில் இருந்து இருந்தால் இத்தகைய குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுத்திருக்கலாம் எனவும், நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் நடைபெறும் ஆன்மீக நகரில் குற்ற சம்பவங்களை தடுக்காமல் மாவட்ட காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் தூங்குகின்றார்களா என்ற கேள்விக்குரியே பொதுமக்கள் மத்தியில் எழுவது குறிப்பிடத்தக்கது.
0
0