டீ-சர்ட்டில் வீரப்பன் போட்டோ… தகராறு செய்த இளைஞர்கள்… தர்மபுரியில் இருதரப்பினரிடையே மோதல் ; போலீசார் குவிப்பால் பரபரப்பு

Author: Babu Lakshmanan
21 December 2023, 10:43 am

தர்மபுரி ; பெத்தூர் கிராமத்தில் இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் போலீசார் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பெத்தூரில் அரசு நூலக கட்டிடம் கட்டும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்த கட்டிட பணிக்காக கம்பைநல்லூர் அருகே கோணம்பட்டி கிராமத்தை சார்ந்த எல்லப்பன், முருகன் உள்ளிட்ட மூன்று கட்டிட தொழிலாளர்கள் தங்களது சமுதாய அடையாளம் பொருந்திய ஆடை அணிந்து வேலைக்கு வந்துள்ளனர்.

இது போன்று ஆடை அணிந்து இக்கிராமத்திற்கு பணிக்கு வரகூடாது என அப்பகுதி இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தாகவும், அதையும் மீறி இன்று மீண்டும் அவர்கள் சமுதாய அடையாளம் பொருந்திய ஆடையை அணிந்து வந்துள்ளனர். அப்போது, பெத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தியாகு என்பவர் இந்த ஆடை அணிந்து எங்கள் கிராமத்துக்கு ஏன் வேலைக்கு வந்தீர்கள் என கேட்டு அவர்களையும், அவர்களது இருசக்கர வாகனத்தையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கம்பைநல்லூர் இளைஞர்கள் அரூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு பெத்தூர் சென்றுள்ளனர். அப்போது, அவ்வூரை சேர்ந்த வாலிபர் தியாகுவை கைது செய்ய முற்பட்டபோது, அவர் அதிக போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

போதையில் இருந்த அவரை போலீசார் தூக்கி வாகனத்தில் ஏற்ற முற்பட்ட போது, தியாகு காலில் காயம் ஏற்பட்டதாக கிராம மக்கள் அவரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அரூர் டிஎஸ்பி ஜெகன்நாதன் தலைமையில் சுமார் 30க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஏடிஎஸ்பி இளங்கோ மற்றும் போலீசார் தியாகுவை, நீங்கள் விரும்பும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காலில் காயம் ஏற்பட்டுள்ளதா என பரிசோதனை செய்யலாம் என கிராம மக்களிடத்தில் கூற, கிராம மக்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து, தாங்களே மருத்துவமனைக்கு அளித்து வருகிறோம் என தெரிவித்து அரூர் அரசு மருத்துவமனைக்கு கிராம மக்களே அழைத்து சென்று சிகிச்சையில் சேர்த்தனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 684

    0

    0