என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க? கோவில் திருவிழா பேனரில் இளைஞர்கள் செய்த அலப்பறை.!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2024, 6:22 pm

என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க? கோவில் திருவிழா பேனரில் இளைஞர்கள் செய்த அலப்பறை.!

மதுரை மாவட்டம் மேலூர் சொக்கம்பட்டியில் உள்ள தொட்டிச்சிஅம்மன் கோவில் 67ம் ஆண்டு சித்திரை மாத பொங்கல் விழா தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இதனையொட்டி, இன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம், அக்கினி சட்டி ஊர்வலமும், தொடர்ந்து பொங்கல் வைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிலையில், இத்திருவிழாவையொட்டி அப்பகுதி இளைஞர்கள் சார்பில் விழாவிற்கு வரவேற்று ஏராளமான விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது.

அதில், ஒரு விளம்பர பேனரில், தமிழகத்தில் முன்னணி திரைப்பட நடிகைகளாக உள்ள திரிஷா, கீர்த்தி சுரேஷ், சமந்தா, அஞ்சலி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட நடிகைகளுடன் அப்பகுதி இளைஞர்கள் சிலர் தத்ரூபமாக சேர்ந்து இருப்பது போன்று காதல் வசனங்களுடன் வைக்கப்பட்ட பேனர் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?