நள்ளிரவில் ரோந்து வரும் மர்ம நபர்கள்.. பைக்கை நைஸாக திருடிச் செல்லும் இளைஞர்கள்; அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
22 December 2022, 4:25 pm

திருப்பூர் ; பல்லடம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை வாலிபர்கள் திருடி சென்ற சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகரை சேர்ந்தவர் நவாஸ் செரீப். இவர், தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். எப்போதும் பணி முடிந்து வந்ததும் தனது வீட்டின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்துவது வழக்கம். நேற்றிரவும் வழக்கம் போல, பணி முடிந்து வீடு திரும்பிய நவாஸ் செரீப், தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார்.

காலை எழுந்து வந்து பார்த்த போது அவரது இரு சக்கர வாகனத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, நள்ளிரவு 12 மணி அளவில் அப்பகுதியில் சுற்றி திரிந்த 3 வாலிபர்கள், நவாஸ் செரீப்பின் இரு சக்கர வாகனத்தின் சைட் லாக்கை உடைத்து வண்டியை தள்ளி சென்றது பதிவாகியிருந்தது.

https://player.vimeo.com/video/783593475?h=3288a40eff&badge=0&autopause=0&player_id=0&app_id=58479

இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தை வாலிபர்கள் திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!