நள்ளிரவில் நாய்களை கொன்று சடலத்தை அள்ளிச் செல்லும் இளைஞர்கள்… விலகாத மர்மம் : ஷாக் சிசிடிவி காட்சி!
Author: Udayachandran RadhaKrishnan20 December 2023, 1:58 pm
நள்ளிரவில் நாய்களை கொன்று சடலத்தை அள்ளிச் செல்லும் இளைஞர்கள்… விலகாத மர்மம் : ஷாக் சிசிடிவி காட்சி!
விழுப்புரம் அருகே இரவில் இளைஞர்கள் நாய்களை அடித்து கொன்று எடுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் பேரூராட்சியில் பஞ்சாயத்து போர்டு தெருவை சுற்றி சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. வீட்டின் வாசலில் ஒரு சிலர் உணவுகள் அளித்து நாய்களை வளர்த்து வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக தெருவில் உள்ள நாய்கள் ஒவ்வொன்றாக காணாமல் போனது. இதில் சந்தேகம் அடைந்த நாய்களின் உரிமையாளர்கள் பஞ்சாயத்து போர்டு தெருவிலுள்ள ஒரு வீட்டில் சிசிடிவி கேமராவின் பதிவில் இரவு நேரங்களில் தெருவில் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது நான்கு இளைஞர்கள் வந்து நாய்களை அடித்து கொன்று தூக்கிச் செல்லும் வீடியோவை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நாய்களை அடித்துக் கொன்று எங்கே கொண்டு செல்கிறார்கள் என்ற விவரம் தெரியாததால் தெருவில் நாய்களை வெளியில் விடாமல் வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளனர்.
இதுவரை அந்தப் பகுதியில் ஆறு நாய்களுக்கு மேல் காணாமல் போனதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்று நாய்களை கொலை செய்து ஓட்டலில் ஆட்டுக்கறிக்கு பதில் நாய்க்கறி போடுவதற்காக கொண்டு சென்றார்களா என்றும் சிசிடிவி காட்சிகளில் உள்ள நபர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாய்களை கொலை செய்து கொண்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.