விலை உயர்ந்த பைக்குகளை மட்டுமே திருடும் இளைஞர்கள் : கோவை போலீசாரிடம் வசமாக சிக்கிய சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2022, 7:51 pm

கோவையில் தொடர் விலையுயர்ந்த இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை பீளமேடு சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து மாயமாவதாக பீளமேடு காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் போலிசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் மர்ம நபர்கள் இருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து அவர்களை தேடி வந்த நிலையில், போலீசார் பீளமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக வந்த இளைஞர்கள் இருவரை பிடித்து விசாரித்தனர்.

அதில் இருவரும் தேனி மாவட்டத்தை சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி, மற்றும் அபிஷேக் குமார் என்பது தெரியவந்தது. மேலும் இருவரும் பீளமேடு சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இவர்களிடம் இருந்து விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் மூன்றும், விலை உயர்ந்த கே.டி.எம் இருசக்கர வாகனம் என 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இருவர் மீதும் மூன்று பிரிவுகளின் வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைந்தனர்.

  • Raghuvaran Fall in love With Famous Actress பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!