உதயநிதி ஆதரவா? இர்ஃபான் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு!
Author: Hariharasudhan2 January 2025, 5:14 pm
எனக்கும், எந்த கட்சிக்கும் தொடர்பு கிடையாது என்றும், நான் அரசியல் கட்சியைச் சார்ந்தவன் இல்லை என்றும் யூடியூபர் இர்ஃபான் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: பிரபல யூடியூபர் இர்ஃபான், சமீபத்திய பேட்டி ஒன்றில், “எனக்கும், எந்த கட்சிக்கும் தொடர்பு கிடையாது. நான் அரசியல் கட்சியைச் சார்ந்தவன் இல்லை. அது மட்டுமல்லாமல், என்னை சிலர் குறிவைத்து தாக்கிப் பேசுவது வேதனையைத் தருகிறது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் நான் வீடியோ வெளியிட்டது புரமோஷனுக்காக மட்டும் தான்.
அதற்காக அவர் எப்படி என்னை ஆதரிக்க முடியும்? அதேபோல், நீதித்துறையும், அரசும் வேறு வேறு தான். அவர்களும் எப்படி என்னைக் காப்பாற்ற முடியும்? நடந்த சம்பவங்கள் அனைத்தும் என் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தான் நீதிமன்றம் செயல்படுகிறது.
நடந்த விஷயங்களைப் பொறுத்தவரை, நான் தனிமையில் இருப்பதாகத்தான் உணர்கிறேன். தனியாகத் தான் தற்போது நடக்கும் பிரச்னைகளைச் சந்தித்து வருகிறேன். யார் யாரோ என்னைத் திட்டுகிறார்கள். இதனால் யாருமே எனக்கு இல்லையா? என்ற எண்ணம் தோன்றுகிறது“ என்றும் அந்த பேட்டியில் இர்ஃபான் பேசியிருக்கிறார்” எனத் தெரிவித்து உள்ளார்.
முன்னதாக, திருமணம் முடித்த இர்ஃபான், அவரது மனைவி கர்ப்பமான நிலையில், தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை விழா நடத்தி, சமூக வலைத்தளம் வாயிலாக அறிவித்தார். இது நமது நாட்டுப்படி தவறு என்ற பட்சத்தில், சுகாதாரத்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. எனவே, அவர் மன்னிப்பு கோரினார்.
இதையும் படிங்க: கனிமொழி எங்கே? திமுக மகளிரணி எங்கே? கேள்விகளால் துளைத்தெடுத்த குஷ்பூ!
பின்னர், அவரது மனைவி பிரசவிக்கும் போது, தொப்புள் கொடியை இர்ஃபானே அறுத்து வீடியோ வெளியிட்டு இருந்தார். இது சர்ச்சையான நிலையில், முதலில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பின்னர் அது ஒன்றும் கொலைக் குற்றம் இல்லை எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.