இப்படியெல்லாம் இருக்குமா..? கொடைக்கானலில் நிழல் இல்லாத நாள்.. ஆச்சர்யத்தில் வியந்து போன சுற்றுலாப் பயணிகள்..!!

Author: Babu Lakshmanan
17 April 2023, 1:00 pm

கொடைக்கானல் ; கொடைக்கானலில் நிழல் இல்லாத நாளை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் நேரில் கண்டுகளித்தனர்.

நிழல் என்பது நம்மை எல்லா நாளும் பின்தொடரும் அறிவியல் நிகழ்வு. ஆனால், இந்த நிழல் வருடத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் ஒரு சில மணித்துளிகள் நம்மை பின் தொடராது. இந்த அறிவியல் நிகழ்வு கொடைக்கானலில் நேற்று நடைபெற்றது.

சரியாக 12.20 மணிக்கு ஆரம்பித்த இந்த நிழல் இல்லாத நிமிடங்கள், சில வினாடிகள் மட்டும் தொடர்ந்தது. இதற்காக கொடைக்கானல் வானியற்பியல் ஆராய்ச்சி நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

நிழல்யில்லாத நாளை கண்டு கழிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வானியற்பியல் ஆராய்ச்சி நிலையத்திற்கு வந்து பார்வையிட்டு வியந்தனர். நேற்று சூரிய வெளிச்சம் சரியாக 10 டிகிரி 13 வரும். இதனால் இந்த டிகிரி அட்சரேகையில் உள்ள கொடைக்கானல் பகுதிகளில் சூரியன் தலைக்கு நேர் மேலே வரும்.

அப்போது நிழலில்லாத நிகழ்வு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து சுற்றுலா பயணிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆச்சர்யத்துடன் கண்டு ரசித்தனர்.

  • good bad ugly movie special screening for ladies பெண்களுக்கு மட்டுமே திரையிடப்படும் குட் பேட் அக்லி திரைப்படம்! அதிரடி காட்டிய பிரபல திரையரங்கம்…