குப்பைகள் தேங்காத ‘Zero Waste’ வார்டாக மாற்றுவேன் : கோவை அதிமுக வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர் உறுதி…!!

Author: Babu Lakshmanan
9 February 2022, 1:03 pm

கோவை : குப்பைகள் தேங்காத வார்டாக மாற்றுவேன் என்று கோவை மாநகராட்சியின் 38வது வார்டு அதிமுக வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர் உறுதியளித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சிக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான, வேட்பாளர்கள் அறிவித்து, தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட 38வது வார்டு அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டவர் ஷர்மிளா சந்திர சேகர். தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், கணவருமான சந்திரசேகர் மற்றும் ஆதரவாளர்களுடன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், இரட்டை இலைக்காக வாக்குசேகரித்த அவர், வார்டு மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.

இதன் ஒருபகுதியாக, 38வது வார்டை குப்பைகள் தேங்காத வார்டாக மாற்றிக் காட்டுவேன் என வடவள்ளியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் ஷர்மிளா சந்திர சேகர் உறுதியளித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், “ஏற்கனவே, குப்பைகள் தேங்காதவறு நிறைய அடிப்படை வசதிகள் செய்துள்ளோம். கடந்த சில மாதங்களாக குப்பைகள் தேங்கியுள்ளன. இதனால், குழந்தைகள், முதியவர்கள் இருக்கும் பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

மக்களின் சுகாதாரம் காப்பதற்காக, இந்த வார்டில் குப்பைகள் தேங்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். முதலில் குப்பைத் தொட்டிகளில் குப்பைகளை போடுவதற்கும், அதனை அப்புறப்படுத்துவதற்கும் தேவையான வழிகாட்டு முறைகள் வழங்கப்படும், எனக் கூறினார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!