பெண்ணுடன் இணைந்து ஹெல்மெட் திருடும் ZOMATO ஊழியர்.. வைரலாகும் ஷாக் VIDEO!!

Author: Udayachandran RadhaKrishnan
20 April 2024, 6:28 pm

பெண்ணுடன் இணைந்து ஹெல்மெட் திருடும் ZOMATO ஊழியர்.. வைரலாகும் ஷாக் VIDEO!!

கோவை மரக்கடை அடுத்த ஜமந்தார் வீதியில் ஜோமேட்டோ (“Zomato”) டீ ஷர்ட்டை அணிந்து உணவு எடுத்துச் செல்லும் ஊழியர் தனது பின்னால் ஒரு பெண்ணை அமர வைத்து இருசக்கர வாகனத்தில் பயணித்தார்.

அப்போது ஒரு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட்டை இருப்பதை கண்டு அங்கேயே தனது வாகனத்தைநிறுத்திய ஜொமேட்டா ஊழியர் சிறிது நேரம் அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்தார்.

பின்னர் Zomato பேகில் ஹெல்மேட்டை எடுத்து திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் கடந்த 17″ஆம் தேதியன்று நடைபெற்றுள்ளது.

ஆனால் வீட்டின் முன்பே இருந்த சிசிடிவியில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது. ஹெல்மெட் திருட்டு சம்பவம் குறித்து வெரைட்டியால் காவல் நிலையத்தில் ஹெல்மெட்டின் சொந்தக்காரர் ஹெல்மெட் உடைய விலை 1500″ரூபாய்க்கு மேல் உள்ளதால் சிசிடிவி கேமராவின் பதிவுகளை வைத்து புகார் அளித்துள்ளார்.

மேலும் படிக்க: தோத்திடுவோம்னு பயமா? அதுக்குள்ள ஒப்பாரி வைக்கறாங்க ; ஐயோ பாவம்… BJP வேட்பாளர்கள் மீது கி.வீரமணி சாடல்!

பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆண் மற்றும் பெண் உட்பட இருவர் ஹெல்மட்டை திருடி செல்லும் காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றனது.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!