ட்விட்டர் நிறுவனத்தை தன்வசமாக்கிய எலான் மஸ்க்… நிகழப்போகும் மாற்றங்கள் என்ன???

Author: Hemalatha Ramkumar
26 April 2022, 2:25 pm

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை கொண்டுள்ளவரும், ஸ்பேஸ் X மற்றும் டெஸ்லா போன்ற நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க் நீண்ட காலமாக ட்விட்டர் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

தற்போது தனது இந்த நீண்ட கால ஆசையை எலான் மஸ்க் நிறைவேற்றி விட்டார். ட்விட்டர் நிர்வாகக் குழுவின் முடிவுப்படி 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்கிடம் ஒப்படைக்க உள்ளது. இதற்கு முன்பாக வெறும் ட்விட்டரின் வெறும் 9 சதவீத பங்குகளை மட்டுமே எலான் மஸ்க் கொண்டு இருந்தார்.

தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளும் எலான் மஸ்கின் வசம் கிடைத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என செய்திகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நிறுவனத்தால் தடைசெய்யப்பட்ட கணக்குகள் மீண்டும் அனுமதிக்கப்படுமா என்று பல ட்விட்டர் பயனர்கள் எலான் மஸ்கிற்கு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தடை செய்யப்பட்ட மிக முக்கியமான நபர்களில் டொனால்ட் டிரம்ப் ஒருவர் ஆவார். இந்த கேள்விக்கான பதிலை விரைவில் எலான் மஸ்க் வெளியிடுவார் என நாம் எதிர்ப்பார்க்கலாம்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி