உங்க பேஸ்புக் போஸ்டுகளை யாரெல்லாம் பார்க்குறாங்கன்னு இனி ஈசியா தெரிஞ்சுக்கலாம்!!!

Author: Hemalatha Ramkumar
28 May 2022, 5:43 pm

Meta (முன்பு பேஸ்புக்) வியாழன் அன்று பயனர்களுக்கான புதிய தனியுரிமைக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதில் பேஸ்புக்கில் உங்கள் போஸ்டுகளை யார் பார்க்கிறார்கள் என்பதை எளிதாக நிர்வகிப்பதற்கான புதிய அமைப்பை வெளியிடுவதாகக் கூறியது.

இப்போது, ​​யாரேனும் டிஃபால்ட்டாக ஆடியன்ஸைத் தேர்ந்தெடுக்கும் போது, ​​அந்த ஆடியன்ஸ்களின் தேர்வு பேஸ்புக்கில் உருவாக்கப்பட்ட புதிய போஸ்டுகளுக்குப் பொருந்தும், அவர்கள் ஒரு குறிப்பிட்ட போஸ்டிற்கு வேறு ஆடியன்ஸ்களைத் தேர்ந்தெடுக்காத வரையில் அவர்கள் தங்கள் டைம்லைனில் பகிர்ந்து கொள்ளலாம்.

முன்னதாக, நீங்கள் சமீபத்தில் தேர்ந்தெடுத்த ஆடியன்ஸூகளே, போஸ்டுகளுக்கான உங்கள் டிஃபால்ட் ஆடியன்ஸூகளாக இருந்தனர். எனவே மற்றவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரு போஸ்டை நீங்கள் போட்டிருந்தால், உங்கள் அடுத்தடுத்த போஸ்டுகளும் அதில் இருக்கும்.

“கம்யூனிட்டியில் உள்ள சரியான நபர்களுக்கு உங்கள் போஸ்டை பகிர்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த இந்தப் புதிய அமைப்பு உங்களுக்கு உதவும்” என்று Metaவின் முதன்மை தனியுரிமை அதிகாரி மைக்கேல் புரோட்டி கூறினார்.

Meta சமீபத்தில் விளம்பர தலைப்புகள் (Ad topics) மற்றும் ஆர்வ வகைகளின் (Interest categories) கட்டுப்பாடுகளை ஒருங்கிணைத்து, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாவில் அணுகக்கூடிய ஒரே கட்டுப்பாட்டை உருவாக்கியது.

நிறுவனம் உங்கள் தகவலை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைப் பற்றி எளிதாகப் புரிந்துகொள்வதற்கும் தெளிவுபடுத்துவதற்கும் தனியுரிமைக் கொள்கையை மீண்டும் எழுதி, மறுவடிவமைத்துள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.

Meta புதிய தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் பற்றிய அறிவிப்புகளை பயனர்களுக்கு அனுப்பும். இந்த புதுப்பிப்புகள் ஜூலை 26 முதல் நடைமுறைக்கு வரும்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?