பயனர்கள் எதிர்ப்பார்க்காத புத்தம் புதிய அம்சத்தை வெளியிட்ட கூகுள் பிக்சல்!!!
Author: Hemalatha Ramkumar27 October 2022, 7:27 pm
தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது சமீபத்திய பீட்டா அப்டேட்டில் பிக்சல் 7 சீரிஸ் பயனர்கள் அழைப்பு செய்யும் போது தெளிவான அனுபவத்தை தருவதற்காக “கிளியர் காலிங்” என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Android 13 QPR1 பீட்டா 3 சாஃப்ட்வேர் அப்டேட்டை டவுன்லோட் செய்பவர்களுக்கு கிளியர் காலிங் அம்சமானது கிடைக்கிறது.
இந்த மாத தொடக்கத்தில் கூகுளின் பிக்சல் வெளியீட்டு நிகழ்வின் போது, மொபைலுக்கு கிடைக்க இருக்கும் சில புதிய சாஃப்ட்வேர் அம்சங்களையும் வெளியிட்டது. அந்த அம்சங்களின் ஒரு பகுதியாக, கிளியர் காலிங் (Clear Calling) உருவாக்கப்பட்டது. இது பின்னணி இரைச்சலை தானாகவே வடிகட்டுகிறது மற்றும் மெஷின் லெர்னிங் மூலமாக மறுமுனையில் குரலை மேம்படுத்துகிறது. இது ஒரு நபரின் குரலானது கேட்பதற்கு கிளியராக இருக்கும்.
Android 13 QPR1 பீட்டாவை நிறுவினால், பயனர்கள் தங்கள் சௌண்ட் செட்டிங்ஸில் (Sound Settings) இந்த அம்சத்தைப் பார்க்கலாம். பயனர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்துவதற்கு முன் கூகுளின் பீட்டா திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும்.
0
0