வாட்ஸ்அப்பில் டெலீட் ஆன மெசேஜை எந்த ஒரு ஆப் இல்லாமல் ரியல்மீ போனில் பார்ப்பது எப்படி???

Author: Hemalatha Ramkumar
6 April 2022, 7:07 pm

ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களைச் சரிபார்க்க உங்களை அனுமதிக்கும் மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் உள்ளன. ஆனால் இவை எதுவும் அதிகாரப்பூர்வமாக வாட்ஸ்அப் செயலியால் ஆதரிக்கப்படவில்லை. இதன் விளைவாக, எல்லா பயனர்களும் அத்தகைய பயன்பாடுகளை பயன்படுத்த விரும்புவதில்லை. இருப்பினும், உங்களிடம் லேட்டஸ்ட் ஒன்பிளஸ் அல்லது ரியல்மீ ஃபோன் இருந்தால், நோட்டிஃபிகேஷன் ஹிஸ்ட்ரி (Notification history) எனப்படும் நேர்த்தியான அம்சம் எந்த மூன்றாம் தரப்பு பயன்பாட்டையும் பயன்படுத்தாமல் இதைச் செய்ய உங்களை அனுமதிக்கிறது.

நோட்டிஃபிகேஷன் ஹிஸ்ட்ரி என்றால் என்ன?
நோட்டிஃபிகேஷன் ஹிஸ்ட்ரி என்பது OxygenOS மற்றும் Realme UI போன்ற தனிப்பயன் ஸ்கின்களில் நீங்கள் காணக்கூடிய சாஃப்ட்வேர் அம்சமாகும். இதனை எனேபிள் செய்ததும், உங்கள் மொபைலில் பாப் அப் செய்யும் அனைத்து உள்வரும் நோட்டிஃபிகேஷன்களின் பதிவை நோட்டிஃபிகேஷன் ஹிஸ்ட்ரி வைத்திருக்கும். இந்த அம்சத்தின் முக்கிய நோக்கம், நீங்கள் தற்செயலாக ஸ்வைப் செய்த நோட்டிஃபிகேஷன்களை மீண்டும் சரிபார்க்க வேண்டும்.

நோட்டிஃபிகேஷன் ஹிஸ்ட்ரியை இயக்குதல் மற்றும் பயன்படுத்துதல்:
சமீபத்திய ஒன்பிளஸ் அல்லது ரியல்மீ சாதனத்தில், அமைப்புகள் (Settings) பயன்பாட்டைத் திறந்து, தேடல் பட்டியில் சென்று “நோட்டிஃபிகேஷன் ஹிஸ்ட்ரி” என தட்டச்சு செய்யவும். இது தேடல் முடிவுகளில்
நோட்டிஃபிகேஷன் ஹிஸ்ட்ரி பகுதியைத் திறக்கும். இந்த அமைப்பிற்குச் சென்று அதை இயக்க செய்யவும்.

இப்போது உங்கள் ஃபோனை எடுக்கும் போது, உங்கள்
நோட்டிஃபிகேஷன் பாரில் ‘இந்த மெசேஜ் டெலீட் செய்யப்பட்டது’ என்ற பாப்-அப்பைக் கண்டால், நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் நோட்டிஃபிகேஷன் பேனலில் கடைசி நோட்டிஃபிகேஷனுக்குக் கீழே இடதுபுறத்தில் உள்ள ‘ஹிஸ்ட்ரி’ பொத்தானைக் கண்டறிவதுதான்.

கிளிக் செய்தவுடன், ஹிஸ்ட்ரி பகுதி திறக்கும் மற்றும் டெலீட் செய்யப்பட்டவை உட்பட அனைத்து சமீபத்திய நோட்டிஃபிகேஷன்களின் பதிவுகளையும் நீங்கள் பார்க்க முடியும். இந்த அம்சம் இயக்கப்பட்ட பிறகு அனுப்பப்பட்ட மெசேஜ்களை மீட்டெடுக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் முன்பு டெலீட் செய்யப்பட்ட அனைத்தும் நிரந்தரமாக இழக்கப்படும்.

  • thug life single release on 25 or 27th april தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?