ஃபார்வர்டு மெசேஜ்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த வாட்ஸ்அப்!!!
Author: Hemalatha Ramkumar3 April 2022, 7:03 pm
வாட்ஸ்அப் செயலியின் தகவல் போர்ட்டலான WABetaInfo படி, ஆண்ட்ராய்டு மற்றும் iOS க்கான வாட்ஸ்அப் பீட்டாவில் குரூப் சாட்களுக்கு அனுப்பப்பட்ட செய்திகளை அனுப்பும்போது புதிய கட்டுப்பாடுகளை வாட்ஸ்அப் தற்போது செயல்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு 2.22.7.2க்கான வாட்ஸ்அப் பீட்டாவிலும், ஐபோன் 22.7.0.76க்கான வாட்ஸ்அப் பீட்டாவிலும் புதிய கட்டுப்பாடுகள் இயக்கப்பட்டுள்ளன.
WABetaInfo ஆல் பெறப்பட்ட ஸ்கிரீன் ஷாட்கள், ஒரு மெசேஜ் ஏற்கனவே அனுப்பப்பட்டதாகக் குறிக்கப்பட்டிருந்தால், அதை ஒன்றுக்கு மேற்பட்ட குரூப்களுக்கு அனுப்ப முடியாது. மேலும் பயனர்கள் அவ்வாறு செய்ய முயற்சித்தால், “ஃபார்வர்டு செய்யப்பப்பட்ட மெசேஜ்களை ஒரு குரூப் சாட்டிற்கு மட்டுமே அனுப்ப முடியும்” என்ற நோட்டிஃபிகேஷன் வருகிறது. ஒரு பயனர் ஒன்றுக்கு மேற்பட்ட குரூப்களுக்கு இதுபோன்ற செய்திகளை அனுப்ப விரும்பினால், அவர்கள் மெசேஜைத் தேர்ந்தெடுத்து அதை மீண்டும் அனுப்ப வேண்டும்.
ஜூலை 2018 இல், பேஸ்புக்கிற்குச் சொந்தமான மெசஞ்சர் இந்தியாவில் ஒரு கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியது. அதில் பயனர்கள் ஒரு மெசேஜை அதிகபட்சமாக ஐந்து தனித்தனி சாட்களுக்கு மட்டுமே அனுப்ப முடியும். ஜனவரி 2019 இல், இந்த கட்டுப்பாடுகள் உலகளவில் நீட்டிக்கப்பட்டன.
WABetaInfo இன் படி, புதிய ஒற்றை குரூப் ஃபார்வர்டு மெசேஜ வரம்பு ஏற்கனவே சில ஆண்ட்ராய்டு பீட்டா சோதனையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் நிறுவனம் இப்போது ஆண்ட்ராய்டு 2.22.8.11 க்கு வாட்ஸ்அப் பீட்டாவை நிறுவும் போது, அதிகமான பயனர்களுக்கு அதே கட்டுப்பாடுகளை செயல்படுத்துகிறது.
பரவலான ஆண்ட்ராய்டு சாதனங்களில் சில புதிய வாய்ஸ் மெசேஜ் அம்சங்களை வெளியிடுவதாக வாட்ஸ்அப் அறிவித்த சில நாட்களில் இந்தப் புதிய கட்டுப்பாடு வந்துள்ளது.
0
0