பச்சோந்திகளைப் போல நிறத்தை மாற்றும் மீன்கள்… ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு!!!

Author: Hemalatha Ramkumar
8 April 2022, 7:21 pm

நாம் பச்சோந்திகளைப் பார்த்திருப்போம். பச்சோந்தி என்றாலே நம் நினைவிற்கு வருவது அவை நிறம் மாற்றிக் கொள்ளும் தன்மை தான். அவை தங்கள் உடல் நிறத்தை சுற்றுப்புறத்திடம் இருந்து மறைப்பதற்கு நிறத்தை மாற்றிக் கொள்கின்றன. வேட்டையாடுபவர்களிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள இது உதவுகின்றன. அதே நேரத்தில் தங்கள் இரையைப் பிடிக்கின்றன.

இப்போது, ​​ஒகினாவா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கிராஜுவேட் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வில், ஸ்க்விட்களும் (கணவாய் மீன்கள்) இதேபோன்ற திறனைக் கொண்டுள்ளன என்பது தெரிய வந்துள்ளது. அவை, முதல்முறையாக, கலர் ஷிஃப்டிங் நுட்பங்கள் மூலமாக கேமராவில் சிக்கின.

ஆராய்ச்சியாளர்கள் ஓவல் ஸ்க்விட் இனத்தை தங்கள் ஒகினாவாவில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தில் வளர்த்து வருகின்றனர். ஒரு நாள் தொட்டியை சுத்தம் செய்யும் போது, ​​அவற்றை அகற்றி பார்த்தார்கள்.

பாசிகளுக்கு மேல், ஸ்க்விட் அடர் பச்சை நிறத்தில் தோன்றினாலும், சுத்தமான தொட்டியின் மேல், அவற்றின் நிழல் சிறிது இலகுவாக மாறியது. இந்த அவதானிப்புகளின் அடிப்படையில், அவர்கள் பார்த்ததை சரிபார்க்க கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர்.

சோதனைக்காக, பல கணவாய் மீன்கள் தொட்டியில் வைக்கப்பட்டிருந்தன. அதில் பாதி சுத்தம் செய்யப்பட்ட பகுதியிலும், மற்ற பாதி பாசிகளால் மூடப்பட்டிருக்கும். நீருக்கடியில் வைக்கப்பட்ட கேமரா, தொட்டியின் உள்ளே என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய ஒரு பார்வையை வழங்கியது. அதே சமயம் தொட்டிக்கு வெளியே உள்ள வழக்கமான கேமரா மற்றொரு பார்வையை வழங்கியது.

ஆராய்ச்சியாளர்கள் பின்னர் கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது, ​​​​ஸ்க்விட்கள் இருபுறமும் நகரும்போது, ​​​​அவற்றின் நிறம் மாறுவதைக் கண்டனர்.

இந்த புதிய வளர்ச்சி பவளப்பாறைகளுக்கு மிக முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை எடுத்துக்காட்டுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 2985

    0

    0