சோலார் பேனல் வைத்து காய்கறி வளர்க்கும் ஆராய்ச்சியாளர்கள்!!!
Author: Hemalatha Ramkumar7 July 2022, 7:03 pm
ப்ரோக்கோலியை நம்மில் பலர் விரும்புவதில்லை. காளிஃபிளவர் போல இருக்கும் இந்த பச்சை நிற காய்கறி உண்மையில் சோலார் பேனல்களுடன் வளர சரியானது.
சோலார் பேனல்களின் கீழ் ப்ரோக்கோலியை வளர்ப்பதை ஆராய்ச்சியாளர்கள் சோதித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு இது மிகவும் சாத்தியமானதாக இருக்கும்.
அக்ரிவோல்டாயிக்ஸ் (Agrivoltaics) என அழைக்கப்படும் வளர்ந்து வரும் துறையின் ஒரு பகுதியான தென் கொரியாவின் சொன்னம் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வின்படி இது சாத்தியமாகி உள்ளது.
அக்ரிவோல்டாயிக்ஸ் என்பது உலகின் ஆற்றல் மற்றும் உணவுக்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வேளாண்மை மற்றும் சூரிய சக்தி ஒரே நிலத்தில் இருப்பதற்கான வழிகளைத் தேடும் ஒரு துறையாகும்.
ஆய்வின்படி, சோலார் பேனல்கள் வழங்கும் நிழல், ப்ரோக்கோலிக்கு ஆழமான பச்சை நிறத்தைப் பெற உதவுகிறது. இது மிகவும் கவர்ச்சிகரமானதாக தோன்றுகிறது மற்றும் பயிர் அளவு அல்லது ஊட்டச்சத்து மதிப்பில் பெரிய இழப்பு இல்லாமல் இதனை செய்கிறது.
எவ்வாறாயினும், ப்ரோக்கோலியை வளர்ப்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்துடன் ஒப்பிடும்போது சூரிய சக்தியை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நிதி நன்மைகள் கணிசமாக அதிகம் — கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகமாக உள்ளது. முக்கியமாக, வயலில் சோலார் பேனல்கள் நிறுவப்படாததால் விவசாயிகள் இந்த வாய்ப்பை இழக்கின்றனர்.
கடுமையான வானிலை காரணமாக திறந்தவெளியில் சாகுபடி செய்வதில் உள்ள சிரமங்களை சமாளிக்க இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது மற்றும் உயர்தர பயிர்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. அதிகரித்த எரிசக்தி உற்பத்தி விவசாயிகளுக்கு பெரும் நன்மைகளை வழங்கும்.
0
0