ட்விட்டர் வெளியிட உள்ள இந்த அம்சத்தை நிச்சயம் நீங்க எதிர்ப்பார்த்து இருக்க மாட்டீங்க!!!

Author: Hemalatha Ramkumar
10 February 2022, 6:52 pm

ட்விட்டர் புதன்கிழமை அதன் பயனர்கள் வீடியோ மற்றும் ஆடியோ பிளேபேக்கை வேகப்படுத்த அல்லது மெதுவாக்க அனுமதிக்கும் புதிய அம்சத்தில் செயல்படுவதாகக் கூறியது.

தற்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் வெப் ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கருவிகள் iOS பயனர்களுக்கும் கிடைக்கும்.

“2x, 1x, 0.5x… இப்போது வீடியோக்களுக்கான பிளேபேக் வேகத்தில் கூடுதல் விருப்பங்களை ட்விட்டர் சோதித்து வருகிறது” என்று நிறுவனம் ஒரு ட்வீட்டில் பதிவிட்டுள்ளது.

“ஆண்ட்ராய்டு மற்றும் இணையத்தை பயன்படுத்தும்போது வெவ்வேறு பிளேபேக் வேகங்களை தேர்வு செய்ய வேண்டிய சூழ்நிலை நமக்கு ஏற்படலாம். எனவே நீங்கள் வீடியோக்கள் மற்றும் ஆடியோ ட்வீட்களை வேகப்படுத்தலாம் அல்லது குறைக்கலாம்” என்று ட்விட்டர் மேலும் கூறியது.

இதன் பொருள் நீங்கள் ஒரு வீடியோவை 0.25x வேகத்தில் அல்லது 2x வேகத்தில் பார்க்க முடியும். இது வீடியோக்கள் மற்றும் ஆடியோ பிளேபேக்குகளுக்கு வேடிக்கையாக இருக்கும்.

இனி வீடியோக்களை ட்வீட் செய்யவும், வீடியோக்களின் வேகத்தை பெருக்கவும், ஆடியோ ட்வீட்கள், டிஎம்களில் உள்ள வீடியோக்கள் மற்றும் வீடியோ லைவ் ரீப்ளேக்கள் ஆகியவற்றின் பிளேபேக் வேகத்தை பயனர்கள் தேர்வு செய்ய முடியும்.

ட்விட்டர் எதிர்காலத்தில் iOS க்கு இந்த சோதனையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது என்றும் கூறியது. நிறுவனம் தற்போது வீடியோவைப் பார்க்க 1x வேகத்தை அனுமதிக்கிறது.

  • fear was more when doing ajith project அஜித் சார் படம்,பயம்தான் அதிகமா இருந்தது- ஆதிக் ரவிச்சந்திரன் ஓபன் டாக்…