10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது? லீவ் எப்போ ஸ்டார்ட்? முழு விவரம்!
Author: Hariharasudhan14 October 2024, 10:42 am
10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 3ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தற்போதைய மாநிலப் பாடத் திட்டத்தின் படி 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2024 – 2025ஆம் கல்வியாண்டிற்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்த நிகழ்வு சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் நடைபெற்றது.
இதன்படி, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 வரை நடைபெறுகிறது. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 5 தொடங்கி மார்ச் 27ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதேபோல், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 வரை நடைபெறுகிறது.
இதன்படி பார்த்தால், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிந்த இரண்டே நாட்களில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் நடைபெற்று முடிந்துவிடும். ஆனால், 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிந்த பிறகே 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளது.
அதேபோல், செய்முறைத் தேர்வைப் பொறுத்தவரையில், 12ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 7 தொடங்கி பிப்ரவரி 14 வரை நடைபெறும். 11ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 15 தொடங்கி பிப்ரவரி 21 வரை நடைபெறுகிறது. 10ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 22 தொடங்கி, பிப்ரவரி 28 அன்றே முடிவடையும். மேலும், தற்காலிக தேர்வு முடிவுகள் தேதியாக 12ஆம் வகுப்பிற்கு மே 9, 11ஆம் வகுப்பிற்கு மே 19 மற்றும் 10ஆம் வகுப்பிற்கு மே 19 அன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த அரசுப் பள்ளி மாணவர்கள்… ஆசிரியர் மீது புகார்..!!
மேலும், ஏப்ரல் 20ஆம் தேதிக்குள்ளாகவே 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் ஆண்டுத் தேர்வுகளை நடத்தி முடித்துவிட்டு, கோடை விடுமுறையை 40 நாட்களாக மாற்ற அரசு திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம், கோடை வெயிலின் தாக்கத்தையும், கல்லூரிகள் திறப்பையும் கருத்தில் கொண்டே இந்த கால அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.