தமிழ்நாட்டில் மேலும் 3 சுங்கச்சாவடிகள்.. எந்தெந்த மாவட்டம்? கட்டண விபரத்துடன் வெளியான அறிவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan5 September 2024, 6:40 pm
தமிழகத்தில் மேலும் 3 சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க உள்ளது. விழுப்புரம் மாவட்டம் நங்கிளி கொண்டான், திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி ஆகிய 3 இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட உள்ளது.
நங்கிளி கொண்டான் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வருவதற்கான கட்டணம் ரூ.60 முதல் ரூ.400 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.95 முதல் ரூ.600 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒரு முறை சென்று வர ரூ.55 முதல் ரூ.370 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் திரும்பி வர ரூ.85 முதல் ரூ.555 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.