லெபனானில் வெடித்த 5,000 பேஜர்கள்.. இஸ்ரேல் செய்த சதி : கையை விரித்த அமெரிக்கா.. பரபரப்பான காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2024, 12:08 pm

லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனையில் பலரது பாக்கெட்டுகளில் இருந்த கையடக்க பேஜர்கள் முதலில் வெடித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்துள்ளன. ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தி வந்த தகவல் பரிமாற்ற கருவிகளான பேஜர் கருவிகள் நூற்றுக்கணக்கில் அடுத்தடுத்து வெடித்ததில் இதுவரை 4 ஆயிரம் பேர் வரை படுகாயம் அடைந்துள்ளதகாவும் 400 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பானது ஹிஸ்புல்லா ஆர்டர் கொடுத்து தைவானில் தயாரிக்கப்பட்ட 5,000 பேஜர்களுக்குள் சிறிய அளவிலான வெடிபொருட்களை (3 கிராம்) வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க: பாடத்தில் டவுட் கேட்ட 12ஆம் வகுப்பு மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர்.. தர்ம அடி கொடுத்த உறவினர்கள்!

மேலும் இந்த சதி திட்டம் பல மாதங்களாக தீட்டப்பட்டுள்ளது. தைவானை தளமாகக் கொண்ட கோல்ட் அப்பல்லோ தயாரித்த 5,000 பேஜர்களை குழு ஆர்டர் செய்துள்ளதாக மூத்த லெபனான் பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்தது, இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக பல ஆதாரங்கள் கூறுகின்றன.

மேலும் புதிய பேஜர்களில் மூன்று கிராம் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், பல மாதங்களாக ஹெஸ்பொல்லாவால் கண்டுபிடிக்கப்படாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கான பதிலடியை இஸ்ரேல் உறுதியாக பெறும் என ஹிஸ்புல்லா சூளுரைத்துள்ளது.

  • Maharaja movie box office in China பிராமண்டத்தை ஓரங்கட்டிய விஜய் சேதுபதி.. சீன பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் VJS!
  • Views: - 974

    0

    0