நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது.. மத்திய நிதியமைச்சருக்கு தமிழக காங்., எம்பி அவசர கடிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2024, 6:32 pm

ஏழைகளுக்கு நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் 10, 20, 50 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்படுவதை குறைந்துள்ளதால் சிறு குறு தொழில்கள், தினகூலி வேலை செய்து வருமானம் ஈட்டுபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

அன்றாட தேவைகளுக்கு அத்தியாவசியமான ரூபாய் தாள்கள் மக்களுக்கு கிடைப்பதை தடுப்பது என்பது அடிப்படை உரிமையை மீறுவது ஆகும்.

மேலும் படிக்க: 2 மகன்களுடன் கிணற்றில் குதித்த தாய்… 3 மணி நேரமாக கயிற்றில் சிக்கி போராடிய 6 வயது சிறுவன்!

பணமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகப்படுத்த இந்த குறைந்த மதிப்புடைய நோட்டுகளை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.

ஆனால் ஏழை எளிய மக்களுக்கு குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டமைப்புக்கான வழிவகை இல்லை.

எனவே ரிஷர்வ் வங்கிக்கு நேரடி அழுத்தம் கொடுத்து குறைந்த மதிப்புடைய நோட்டுகள் அச்சடிக்கப்படுவதை அதிகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!