கேரள சினிமாத்துறையை அதிர வைத்த பாலியல் விவகாரம்.. முன்ஜாமீன் கேட்டு அலையும் பிரபல நடிகர்!

Author: Udayachandran RadhaKrishnan
12 September 2024, 4:00 pm

ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி தயாரித்து கொடுத்த அறிக்கை கேரள சினிமா துறையில் பெரும் புயலை கிளப்பியது. இதன் தாக்கம் இந்திய சினிமாவில் ஒலித்து வருகிறது.

கேரள சினிமாதுறையில் வாய்ப்புக்காக நடிகைகளிடம் நடிகர்கள் அத்துமீறிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நடிகைகள் புகாரின் அடிப்படையில் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.

தங்களின் மீது பதியப்பட்டுள்ள பாலியல் வழக்குகளில் இருந்து முன்ஜாமீன் கேட்டு முகேஷ் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இயக்குனர் வி.கே.பிரகாஷூம் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். பெண் திரைக்கதை எழுத்தாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இயக்குனர் வி.கே.பிரகாஷ் மீது பாலியல் வழக்கு பதியப்பட்டிருந்தது.

அந்த வழக்கில் இருந்து தனக்கு முன்ஜாமீன் கேட்டு தான் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வி.கே.பிரகாஷூக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது.

இதேபோன்று நடிகர்கள் ஜெயசூர்யா, பாபுராஜ் ஆகியோரும் தங்களின் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருந்து முன்ஜாமீன் வழங்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கின்றனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்க்ப்படுகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 344

    0

    0