கண்ணிமைக்கும் நேரத்தில் தட்டித் தூக்கிய வேன்.. ஒருவர் பலி!

Author: Hariharasudhan
17 October 2024, 7:27 pm

திண்டுக்கல் குஜிலியம்பாறை அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திண்டுக்கல்: கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, மாலப்பட்டியைச் சேர்ந்தவர் மதுபாலன். 23 வயதான இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நண்பர் சிவா. இந்த நிலையில், இவர்கள் இருவரும் நேற்று இருசக்கர வாகனத்தில் வேடசந்தூர் அருகே உள்ள பாளையத்திற்கு வந்துவிட்டு, மீண்டும் கடவூர் நோக்கிச் சென்றனர்.

அப்போது இருசக்கர வாகனத்தை மதுபாலன் ஓட்டிச் சென்றார். சிவா பின்னால் உட்கார்ந்து சென்றார். இந்த நிலையில், குஜிலியம்பாறை அருகே உள்ள முத்தம்பட்டி பிரிவு பகுதியில், இருசக்கர வாகனம் சென்றபோது எதிரே வந்த மகேந்திரா வேன் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட மதுபாலன் மற்றும் சிவா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

அப்போது அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சையில் இருந்த மதுபாலன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படிங்க : ஸ்டாலினுக்கு எடப்பாடியே பரவால்ல.. செல்லூர் ராஜூ தடாலடி!

மேலும், சிவா தலையில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, இது குறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Bharathiraja son Manoj death இறந்த பின்பும் இப்படியா..மனோஜ் சவப்பெட்டி மீது நடந்த மோசமான செயல்..பிரபலம் காட்டம்.!