ஒரே ஒரு லட்டு ₹1.87 கோடிக்கு ஏலம்.. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2024, 7:59 pm

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி உற்சவம் கோலாகலமாக நடத்தப்படுகிறது. தெலங்கானாவில் நடைபெறும் உற்சவத்தில் இங்கு, சிலைகள் நிறுவுவது முதல், லட்டு ஏலம் என ஒவ்வொரு நிகழ்ச்சியும் மிக முக்கியமானது.

அதனால்தான் நாடு முழுவதும் எத்தனை சிலைகள் வைத்தாலும் அனைவரது கவனமும் தெலங்கானாவில் இந்த ஆண்டு அவ்வாறு நடைபெற்றது என்று இருக்கும்.

இந்நிலையில் ஐதராபாத் பண்ட்லகுடா கிர்த்தி ரிச்மண்ட் வில்லாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்டு அதிக விலைக்கு ஏலம் விடப்படுவது வழக்கம். இங்குள்ள மக்கள் அனைவரும் வசதி உள்ளவர்கால் என்பதால் லட்டு ஏலமும் ஒவ்வொரு ஆண்டும் அதே அளவில் ஏலம் நடைபெறும்.

வரலாறு காணாத விலைக்கு பக்தர்கள் லட்டுகளை வாங்கி செல்கின்றனர்.
இந்த ஆண்டு கீர்த்தி ரிச்மண்ட் வில்லாவில் 4 இடத்தில் விநாயகர் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

இதில் பூஜையில் வைத்து வழிப்பட்ட லட்டு ஏலத்தில் அங்கு வசிக்கும் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் பங்கேற்றனர். இங்கு கடந்த 2022ல் ₹1.26 கோடிக்கு விற்கப்பட்ட லட்டு, 2021ல் ₹60 லட்சத்துக்கு விற்பனையானது.

Vinayagar Laddu Auction

இம்முறையும் பக்தர்கள் அதிக விலை கொடுத்து லட்டு வாங்கியுள்ளனர். இதுகுறித்து சொசைட்டி தலைவர் மகேந்தர் ரெட்டி பேசுகையில் லட்டு ஏலத்தில் 1.87 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.

இந்த லட்டு ஏலத்தில் கிடைத்த பணம் சொசைட்டி சார்பில் அனாதைகள், மாற்று திறனாளிகளுக்கு உதவி செய்யவும், புத்தகங்கள் வாங்கி தர பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க: AI மூலம் உதயமான கலைஞர் கருணாநிதி.. மகன் அருகே அமர்ந்து உரை : முப்பெரும் விழாவில் சிலிர்த்த திமுகவினர்..!

இதேபோன்று ஐதராபாத் ஹைடெக் சிட்டியில் உள்ள மைஹோம் வில்லாவில் லட்டுகள் ஏலம் விடப்பட்டதில் கம்மம் மாவட்டம் இல்லந்து கிராமத்தை சேர்ந்த ஒருவர் ₹ 29 லட்சத்திற்கு ஏலத்தில் லட்டு வாங்கினார்.

இங்கு கடந்த ஆண்டு 25.50 லட்சத்திற்கு லட்டு ஏலத்தில் விற்கப்பட்டது. அதே கிராமத்தைச் சேர்ந்த ஹரிகிஷன் ரெட்டி, ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லமண்டலம் முடியலாவில் வைத்து வழிப்பாடு செய்த லட்டு ₹ 12.16 லட்சத்துக்கு பெற்றார்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 263

    0

    0