பாம்புடன் வாயோடு வாய் வைத்து விபரீத ரீல்ஸ் எடுத்த இளைஞர் : 10 நிமிடத்தில் பரிதாபம்!(வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2024, 7:53 pm

தெலுங்கானா மாநிலம் காமா ரெட்டி மாவட்டத்தில் உள்ள தேசய்யாபேட்டையை சேர்ந்த இளைஞர் சிவா.

பாம்பு பிடிக்கும் குடும்பத்தை சேர்ந்த சிவா சிறு வயது முதல் பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் நல்ல பாம்பு ஒன்று இன்று மதியம் புகுந்தது.

உடனே சிவாவுக்கு தகவல் பறந்த நிலையில் விரைந்து வந்த சிவா அந்த நல்ல பாம்பை பிடித்து அதன் வாயோடு வாய் வைத்து கவ்வி கொண்டு சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய ரீல்ஸ் எடுத்தார்.

அப்போது சிவா நாக்கில் அந்த பாம்பு ஒரு கொத்து கொத்தியது. ரீல்ஸ் எடுக்கும் ஆர்வத்தில் இருந்து சிவாவுக்கு பாம்பு கடித்தது தெரியவில்லை.

இதனால் சற்று நேரத்தில் விஷம் உடல் முழுவதும் பரவி சிவா அதே இடத்தில் சரிந்து விழுந்து மரணம் அடைந்தார்.

  • Virat Kohli fake video அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!