ஆதார் கார்டு புதுப்பிக்கணுமா? கவலையை விடுங்க.. சலுகையை அறிவித்த ஆணையம்!

Author: Udayachandran RadhaKrishnan
12 September 2024, 2:16 pm

ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது ஆதார் அட்டையை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவுறுத்தி வருகிறது.

இதனால் வரும் செப்டம்பர் 14ம் தேதிக்குள் இலவசமாக ஆதார் அட்டையை அப்டேட் செய்யலாம் என்றும், அதற்கு அடுத்த நாள் முதல் 50 ரூபாய் கட்டணம் செலுத்தி அப்டேட் செய்யலாம் என ஆதார் ஆணையம் கூறியிருந்தது.

மேலும் படிக்க: விஜய் கட்சி போட்டிக்கு வருவதால் பயப்பட வேண்டியது பாஜக அல்ல… ஹெச் ராஜா அதிரடி பேச்சு!!

இந்த நிலையில் செப்டம்பர் 14-ந்தேதி வரை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என்ற சலுகை தற்போது டிசம்பர் 14-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் டிசம்பர் 14-ந்தேதி வரை இலவசமாக முகவரி போன்ற மாற்றங்களை செய்து கொள்ளலாம்.ஆன்லைன் மூலம் முகவரியை மாற்றிக்கொள்ளலாம். இதற்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

  • Actor Vinayakan controversy போதையில் செய்த அடாவடி…என்னால சமாளிக்க முடியல…மன்னிப்பு கேட்ட விநாயகன்…!