தெலுங்கு பெண்களை இழிவாக பேசியதாக பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்மன் கொடுக்கச் சென்ற போது நடிகை கஸ்தூரி வீட்டில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுக மற்றும் திராவிட சித்தாந்தம் பேசுபவர்களை தொடர்ந்து எதிர்த்து கருத்து தெரிவித்து வரும் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், தெலுங்கு பேசக்கூடிய பெண்களை இழிவாகப் பேசியதாக சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாக சென்னை மட்டுமின்றி, மதுரை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், பிற மாநிலங்களிலும் பெண்கள் மற்றும் தெலுங்கு சமூக அமைப்புகள் புகார்கள் அளித்து வந்தனர். இந்த புகார்களின் எண்ணிக்கை மறுநாள் அதிகரிக்கத் தொடங்கி, மாநில செய்தி மேடையில் அரசியல் கவனமும் பெற்றது.
அந்த வகையில், தெலுங்கு பேசுபவர்கள் பற்றி அவதூறாக பேசியதாக அகில இந்திய தெலுங்கு சம்மேளனம், நடிகை கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து, இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகக் கோரி கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் வழங்க திட்டமிட்டனர். இதன்படி, இன்று கஸ்தூரிக்கு சம்மன் வழங்க போலீசார் சென்றபோது, போலீசார் வருவதற்கு முன்னதாகவே, அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு உள்ளதால், போலீசார் சம்மனை வீட்டு சுவற்றில் ஒட்டிவிட்டுச் சென்று உள்ளனர். மேலும், கஸ்தூரியை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: நெல்லையில் பிறந்த டெல்லி கணேஷ்.. காலமெல்லாம் பேர் சொல்லும் சாதனைகள் என்னென்ன?
முன்னதாக, பிராமணர்களுக்கான ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, “300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு ராஜாவுக்கு அந்தப்புற பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்? அதனால் தான் இங்கு தமிழர்கள் முன்னேற்றக் கழகம் என்று யாரும் வைக்க முடியவில்லை” எனப் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைரலாகும் செல்வராகவனின் இன்ஸ்டா வீடியோ நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த அமரன் திரைப்படம் பயங்கர ஹிட் அடித்து வசூல்…
சைந்தவிக்கு எப்போதும் நல்ல மனசுங்க இசையமைப்பாளராகவும் நடிகராகவும் ஜொலித்து கொண்டிருப்பவர் ஜி வி பிரகாஷ்,இவருடைய நடிப்பில் வெளியாக இருக்கும் 'கிங்ஸ்டன்'…
நடிகர் பாண்டியன் இறப்பின் கொடூர பின்னணி தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த நடிகர் பாண்டியன்,இவர்…
சென்னையில் பிரபல சினிமா பட இயக்குநருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை அதகாரிகள் அதிரடியாக முடக்கியுள்ளனர். ஜென்டில்மேன் படம் மூலம் தமிழ்…
இயக்குனராகும் டைட்டானிக் பட ஹீரோயின் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தயாரித்து இயக்கிய திரைப்படம் டைட்டானிக். ஒரு கப்பலில்…
நான் செத்தா விஜய் சேதுபதி தான் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என பிரபல நடிகை விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில்…
This website uses cookies.