நிதியமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா உரிமையாளர் : வைரலான வீடியோ… வெளுத்து வாங்கிய காங்கிரஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 September 2024, 12:39 pm

கோவை கொடிசியாவில் நேற்று முன்தினம் தொழில் முனைவோர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், “இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் இருக்கிறது.

இந்த முரண்பாடு களையப்பட வேண்டும். அதே போல, Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்ல.. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி.. வாடிக்கையாளர் சொல்றாரு.. க்ரீமை கொண்டு வா.. நானே வச்சிக்கிறேன்னு சொல்றாரு… கடை நடத்த முடியல மேடம்… ஒரே மாதிரி வையுங்கள். ஒரு குடும்பத்துக்கு பில் போடணும்னா கம்யூட்டரே திணறுது மேடம்..” என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

மேலும் படிக்க: தீ விபத்தில் சிக்கி உடல் கருகி பெண்கள் உயிரிழந்த விவகாரம்… மாநகராட்சி நோட்டீஸ் : கட்டிட உரிமையாளர் காட்டமான பதில்!

சீனிவாசன் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், ஜி.எஸ்.டி. குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா சீனிவாசன்.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளங்களில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இதற்கு பல்வேறு தரப்பினம் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். கேரள காங்கிரசும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

கேரள காங்கிரஸ் கூறியிருப்பதாவது:- சீனிவாசன் எந்த கட்சியையும் சார்ந்தவர் அல்ல என்று நேற்று முன்தினம் வெளியான வீடியோவில் கூறினார். மோடி சகிப்புத்தன்மையற்றவர். அவரது கூட்டாளிகளும் அவரைப் போலவே செயல்படுகிறார்கள், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாய், மிகவும் சகிப்புத்தன்மையற்றவர்களாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 345

    0

    0