வயல்வெளியில் இறங்கிய ராணுவ ஹெலிகாப்டர் : வெள்ள நிவாரண பணியின் போது பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2024, 12:55 pm

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஏற்பட்ட வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக வந்த இராணுவ அதிகாரிகள் கடந்த மூன்று நாட்களாக உணவு, மருந்து விநியோகம் மற்றும் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில் விஜயவாடாவில் இருந்து மூன்று ஹெலிகாப்டரில் ராணுவ அதிகாரிகள் ஐதராபாத்தில் உள்ள ஹக்கிம்பேட் நோக்கி சென்று கொண்டுருந்தனர்.

அப்போது ஒரு ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பைலட் உடனடியாக தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் சிட்யாலா மண்டலம் வாணிபகல கிராமத்தில் விவசாய வயல்வெளியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கினார்.

ஹெலிகாப்டரில் மூன்று ராணுவ அதிகாரிகள் இருந்த நிலையில் வயலில் ராணுவ ஹெலிகாப்டரை பார்த்து விவசாய வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் முதலில் அதிர்ச்சி அடைந்தனர்.

விபத்து ஏதுமின்றி வயல்களில் பத்திரமாக இறங்கியதால் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ஹெலிகாப்டரை சரி செய்ய ராணுவத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் ஐதராபாத்தில் இருந்து புறப்பட்டு சம்பவ வந்து பிரச்னையை ஆய்வு செய்து வருகின்றனர்

  • ajith kumar team won second place belgium car race விபத்துக்கு கிடைத்த வெகுமதி- கார் ரேஸில் மீண்டும் தடம் பதித்த அஜித்குமார்! மாஸ் காட்டுறாரே!