கோவிலுக்கு சென்ற சிறுவனின் பூணூல் அறுப்பு.. இது தான் திராவிட மாடல் ஆட்சியா? கொதிக்கும் எல்.முருகன்!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2024, 5:55 pm

நெல்லை பாளையங்ககோட்டை தியாகராஜ நகரில் வசித்து வரும் சுந்தர் என்பவரின் மகன் ஆன்மீக நிகழ்ச்சியல் பங்கேற்க தனது வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.

தெருவில் நடந்து சென்ற போது அவ்வழியாக பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், அவரை தடுத்து அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்து எறிந்து, இது போன்று பூணூல் அணிந்து வரக்கூடமாது என மிரட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், நெல்லை பா4க உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு வந்த மத்திய அமைச்சர் எல்.முருகன் பாதிக்கப்பட்டவரை சந்தித்து ஆறுத லகூறினார்.

இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள எல்.முருகன், திருநெல்வேலி மாவட்டம் டிவிஎஸ் நகரை சார்ந்த சிறுவனை தாக்கியதோடு, அவன் அணிந்திருந்த பூணூலை அறுத்தெறிந்து, ‘இனி பூணூல் அணியக்கூடாது’ என்று மிரட்டியும் சென்றிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இச்சம்பவத்தை கேள்விப்பட்டு உடனடியாக அவரது இல்லத்துத்துக்கு சென்று ஆறுதல் கூறினேன்.

மேலும் படிக்க: விசிக இல்லாமல் திமுக ஜெயிக்க முடியாது.. கூட்டணிக்கு ஆப்பு வைக்கும் ஆதவ் அர்ஜூனா? திருமா கேம் ஸ்டார்ட்?!

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி ஓர் மதத்தவரின் புனித பொருட்களை அவமதிப்பது, இழிவுபடுத்துவது, கேலி செய்வது ஆகியவை பெரும் குற்றமாகும். ஆனால் தமிழகத்தில் அரை நூற்றாண்டிற்கு மேலாக திராவிடத்தின் பெயரால் மத நம்பிக்கை, இந்துக்களுக்கு எதிராக ஓர் மக்கள் விரோத சிறு கும்பல் தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

இத்தகைய சமூக விரோத கொடும் செயலை செய்த நபர்களை உடனடியாக கண்டுபிடித்து முறையாக விசாரித்து அவர்கள், யார் தூண்டுதலால் இந்த செயலை செய்தார்கள் என்பதையும் கண்டுபிடித்து அந்த திரைமறைவு கருப்பு நபர்களையும் சட்டத்தின் முன்னாள் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

  • Vidamuyarchi movie bookings அஜித்தின் விடாமுயற்சி கொண்டாட ரெடியா…படத்தின் புக்கிங் ஓபன்..குஷியில் ரசிகர்கள்..!
  • Views: - 696

    0

    0