அடிசக்க.. தீபாவளிக்கு 4 நாள் லீவ்.. ஹேப்பி அண்ணாச்சி!
Author: Hariharasudhan19 October 2024, 1:41 pm
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.
சென்னை: இந்த வருடம் தீபாவளி திருநாள் அக்டோபர் 31ஆம் தேதி வியாழன்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. இதனால், வெள்ளிக்கிழமை, அதாவது நவம்பர் 1ஆம் தேதியும் விடுமுறை அளிக்க அரசு அலுவலர்கள், ஊழியர்கள் என பல்வேறு தரப்பிடம் இருந்தும் கோரிக்கை எழுந்தது.
இதையும் படிங்க : பெண்களை வீடியோ எடுத்த காவலர்.. கோவை பஸ் ஸ்டாப்பில் அதிர்ச்சி
இந்த நிலையில், தீபாவளிக்கு மறுநாள் (நவ.1) விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இவ்வாண்டு தீபாவளியை 31.10.2024 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 01.11.2024 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்தும் அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும். அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 09.11.2024 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.