விசிக இல்லாமல் திமுக ஜெயிக்க முடியாது.. கூட்டணிக்கு ஆப்பு வைக்கும் ஆதவ் அர்ஜூனா? திருமா கேம் ஸ்டார்ட்?!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2024, 5:03 pm

சமீப நாட்களாகவே திருமாவளவன் கட்சி திமுகவக்கு எதிராக திரும்பகிறதோ என்ற சந்தேகம் எழுந்துவரும் நிலையில், ஒவ்வொரு நாளும் புதிய சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை.

திருமாவளவன், அறிவித்த மது ஒழிப்பு மாநாடு, அதைத் தொடர்ந்து ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என தொடர்ச்சியாக திமுகவுக்கு குடைச்சல் தரும் விஷயங்களையே செய்து வருகிறார்.

இப்படி இருக்க, திருமா சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். ஆனால் மீண்டும் விசிகவில் இருந்து திமுகவுக்கு எதிரான குரல் ஒலித்துள்ளது.

விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, தனியார் தொலைக்காட்சியில் பங்கேற்ற நிகழ்ச்சியால் பல விவாதங்கள் ஏற்பட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தான் விசிக மது ஒழிப்பு மாநாட்டுக்கு அடித்தளமாக அமைந்ததாகவும், இது திமுகவுக்கு எதிரான செயல் கிடையாது என கூறினார்.

மேலும் படிக்க: 50 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல்கள்.. ஃபிரிட்ஜிற்குள் காத்திருந்த அதிர்ச்சி.. பதற வைக்கும் பின்னணி!!

திமுகவில் விசிக பயணம் செய்தாலும்,மக்களின் பக்கம் நின்று அவர்களுக்காக செயல்படி வேண்டிய பொறுப்புடன் விசிக இந்த மாநாட்டை கையில் எடுத்தாக கூறியுள்ளார்.

மேலும் வட மாவட்டங்களில் விசிக இல்லாமல் திமுக வெல்ல முடியாது என்றும், இங்கு யாரும் பெரிய கட்சி கிடையாது, பெரிய கட்சி என்றால் ஜெயலலிதா போல 234 தொகுதிகளில் திமுக தனித்து நிற்கலாமே என கூறினார்.

கூட்டணி கட்சிகள் இல்லாமல் திமுக ஜெயித்திருக்க முடியாது, நேற்று சினிமாவில் இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர்கள் இன்று முதல்வராகவும், துணை முதல்வராகவும் வரும் போது திருமாவளவன் எப்போது முதல்வராவது என விசிக கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர். இதில் தப்பு இல்லையே என அவர் கூறினார்.

ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு திமுகவினரிடையே கொந்தளிக்க வைத்துள்ளது. அவர் அப்படி பேசியது திருமாவுக்கு தெரியாதா? எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என முணுமுணுக்கின்றனர்.

ஒரு வேளை திமுகவுக்கு எதிராக கடந்த சில நாட்களாக விசிக செயல்பட்டு வருவது திருமாவின் கேம் ஆக இருக்குமோ என்றும் கருதுகின்றனர்.

  • IT raids Dil Raju and Naveen Yerneni Places விஜய், அஜித் பட தயாரிப்பாளர்கள் இடங்களில் ஐடி ரெய்டு.. பரபரப்பில் டோலிவுட்!